அந்தச்
சிறுமி
------------------------------
------------------------------
ரெண்டாவது
தடவை
தீனி
தர மறுத்திருப்பாளா அம்மா
அப்பா
ஏதேனும் சிடைத்திருப்பாரா
ஏதேனுமொரு
செல்லச் சண்டையில்
தனக்கு
யாரும் ஆதரவளிக்கவில்லையா
தன்
நண்பர்களுக்கு இருப்பதுபோன்று
நல்ல
துணிகளோ, தோடு
ஜிமிக்கிகளோ
கேட்டு...
மறுத்துவிட்டார்களா
அம்மா
சோறாக்கும்வரை
பொறுத்திருக்கமுடியாமல்
ஆயா
வீட்டுக்குப் போகிறாளா
சும்மா
சும்மா
கடைக்குப்
போகச்சொல்கிறார்களா
அம்மாவை
அப்பா அடித்துவிட்டாரா
விளையாடிக்கொண்டிருந்த
இடத்தில்
நட்புகளில்
யாரேனும் அடித்துவிட்டார்களா
விளையாட்டுக்கு
சேர்த்துக்கொள்ளவில்லையா
இன்னும்
இரண்டு நாட்கள்
இருப்பார்கள்
என்று எதிர்பார்த்த
தாத்தாவோ
பாட்டியோ மாமாவோ
ஏதேனும்
பொய் சொல்லிவிட்டு
போய்விட்டார்களா
பந்தி
நடக்கும் விருந்துவீட்டைக்
கடந்து
வருகையில்
ஒருவரும்
சாப்பிடச் சொல்லவில்லையா
தாயில்லா
பிள்ளையா
சித்தி
ஏதேனும் ஓரவஞ்சனை
செய்திருப்பாளா
காய்ச்சலா...
பாலியல்
தொல்லை நேர்ந்திருக்குமா
ஆசிரியரின்
அச்சுறுத்தலுக்குப் பயந்து
பள்ளிக்கூடம்
போகப்பிடிக்கவில்லையா
ஏன்டா
ஒரு மாதிரியா இருக்கேன்னு
ஒருத்தரும்
கேட்கவில்லையா
காரணம்
இன்னதென்று தெரியாதபோதும்
மனதைக்
குடைந்துகொண்டே இருக்கிறது
முந்தா
நாள் மதியம்
யாருமற்ற
வீதியில்
தனியாக
அழுதுகொண்டே போன
சிறுமியின்
முகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக